Friday 26 April 2013

கவிதை சிதறல்கள் ...

இரு குழல் கொண்ட துப்பாக்கி,
இரு குழல் கொண்ட பீராங்கியையே
நேர் நின்று மார் காட்டியவன் ,
உயிர் வருடும் , உன் நாசியினை
நேர்  காண யோசிக்கின்றேன் ....

நாசி (மூக்கு )
 ***************************************************************************
இரவு, நிலவு, தூக்கம், கனவு
சுமைகளாய் இருந்த இவைகள்
அரும் சுவைகளாக, சிலநாட்களாய்
மற்றவைகளில் மட்டற்ற மகிழ்ச்சி
கொள்ளும் என் மனம் ,
ஒற்றை விஷயத்தில் மட்டும்
ஒட்டிட மறுப்பதேன் ??
நீ வருவதில்லை என்பதாலோ

கனவு  
**********************************************************************************
குடல்களை கிள்ளி உயிரினை கொள்ளும்
கொலை பசியினையும் பொருட்படுத்தாது
உச்சி வெய்யிலில் உழைத்திருந்தும்
சற்றும் சளைக்காமல் , கலைப்பாகாதவன்
உன் சுவாசிப்பை உணர்ந்து ,மண்ணில்
சரிந்து விழுகின்றேன் மயக்கமாகி ....

-மயக்கம்- 
************************************************************************************
கல்கொண்டும் மண்கொண்டும்
கலந்து செய்திடின், உன் கண்ணியம்
களங்கம் பெற்றுவிடும்  என்றே
உடலையும், உயிரையும் உருக்கி
உருவாக்கியிருக்கின்றேன்,
உன் உன்னதம் போற்றிட
உயிர்வாழும் மனிமண்டபமாய்  ....

மணிமண்டபம்  
**********************************************************************************
கரிக்கோல் கொண்டு கவிதை கிறுக்கினேன்
வெறும் கைத்தட்டல் கிட்டியது ..
காகிதத்தில் கிறுக்கியதாலோ??

பேனாவை கொண்டு கவிதை படைத்தேன்
வெறும் பாராட்டு பெற்றது
புத்தகத்தினில் பதித்ததாலோ ??

இதழ்களை கொண்டு இன்பக்கவிதை எழுதப்போகிறேன்
இந்த உலகம் இருக்கும் வரை இன்பம் நிலைக்கும்படி

இத்தனை நம்பிக்கையா ???

இக்கவிதை இடம்பெர்போகும் இடம்
உன் தேகம் ஆயிற்றே

தேகம்
 
  
 

No comments:

Post a Comment