Sunday 28 April 2013

நிலவே !..

வெள்ளிமலரே !
வெள்ளைவரமே !
பிள்ளைமுகமே !
கொள்ளையழகே !

வானத்தின்,  வனப்பிர்க்கும் ,
வசந்தத்திர்க்கும், வசீகரத்திர்க்கும்
பெரும்பான்மை வளம்தன்னை
வசம் கொண்டு வலம் வரும்
வசீகரமே !!

என்னவளின்  பொன்முகத்தினை
மாதிரிவடிவாய் கொண்டு
உன்முகம் அதை , வரமாய்
வாங்கிய உச்சத்தவமே !

 ஒர்நிலையில்
தேய்பிறையாய் தேய்ந்து ,
வளர்பிறையாய் வளர்ந்து ,
முழுநிலவாய் மாறி
பௌர்ணமியாய் ஒளிர்பவளே !

உன் கவர்ச்சிக்குளிர்
கொண்டு, என்னையும்
கூர்ந்து கவர்ந்துவிட்டாய் 
மற்றவரை போல் ..

நானும் உன் ரசிகன்தான்
ஆயினும் ,
உன் பன்நிலைகளில்
நான் விருபுவது
அமாவாசையை தான்

அறிந்ததும் அப்படியே
அதிர்ந்திருப்பாயே ?
ஆம் , அமாவாசை
அன்றுதான் நான்
அவள் எழில் மனதினில்
முழு நினைவாய்
நிறைந்திருப்பேன் ...

எனக்கிணையாக அவள்
நேசிப்பது
உனை என்பதால் ...

No comments:

Post a Comment