Friday 26 April 2013

முகத்தின் - முத்தாய்ப்புக்கள்

காண்போரை எலாம் கண்டதும்
    கொள்ளை கொள்ளும் நின்
    கொள்ளை எழில் நிறைந்த
    கொஞ்சும் கண்களது,ஒர்முறையும்
    நேர்காணாத எனை மட்டும்
    கொள்ளைக்கொண்டு கொல்லப்பார்ப்பது ஏன் ??
    விழிக்குவிழி பழிக்குபழி என - நின்
    விழிபார்த்து பழிவாங்கிட நினைந்தேன்
    கொள்ளை கொள்ளும் நின் கண்களுக்கு
    கொள்ளைபோகாதிருக்க கற்றுதந்துள்ள
    களரி கலையினில் கடும்காயம்பட்டு
    குருதிக்களரி கொண்டிட கருத்தின்றி
    கண்மூடி காத்துக்கிடக்கின்றேன்
    கனவுகளில்
    உன் கண்களோடு சமரிட .......
    ************************************************** *****
    கிள்ளாது மனம் கிள்ளி
    கொல்லாது நிதம் கொல்லும்
    நின் நாசியின் நேர்த்தியை
    நிதம் யோசியோசி என யோசிக்கவா?
    அல்லது,
    இல்லாத வைர மூக்குத்தியாய்
    பொல்லாத பெரும் வரம் வேண்டாம்
    நின் நாசியின் மூக்குத்தியின் கீர்த்திக்கு
    துணையான திருகாணியாகிட யாசிக்கவா ??
    ************************************************** ******
    "முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் "
    "மெய்யினை மெய்யால் தான் வெல்ல வேண்டும் "
    உன் முன்னோர்கள் சொல்லி சென்ற
    பொன்னான பொன் மொழிப்படி
    என் கண்ணான கண்ணே நீ
    பின்பற்றுதல் நியாயம் தான்
    அதற்காக ,
    நின் நாசி பேசும் சுவாச மொழியாம்
    உன் மூச்சினை கொண்டு
    என் மூச்சினை கொள்ளை கொள்வது
    எவ்வழி நியாயம் ??
    ************************************************** ********
    மன்னர் காலத்தோடு பொற்காசுகள்
    குவியல்குவியலாய் பொற் குவியல்கள்
    மண்ணோடு மண்ணானதாய் கேள்வி ...
    இருந்தும் ,
    உன்னோடு மட்டும் எப்படி ?
    கைவசம் , இத்தனை பொற்காசுகள் ??
    சிரிக்கும்சிரிப்புகளில்
    சிதறவிட்டு செல்கின்றாய் ??
    ************************************************** *********
    விரிந்த நிலையிலேயே இருந்துவிட்டால்
    எங்கே,எனக்கு விருந்தாகிவிடுவோமோ
    என உள்ளம் மருங்கித்தான்
    ஒன்றோடு ஒன்று கெட்டியாய் ஒட்டியபடி
    சுருங்கியே இருக்கின்றீரோ ??
    என்னவளின் வாய் சொர்கத்தின்
    வாயிற்கதவுகளாய் வரம் வாங்கிய
    சிவப்புக்கருங்காலிகளே (இதழ்களே ) !!
    ************************************************** *********
    கண், மூக்கு , மூச்சு ,இதழ்கள் வாய்
    என வரிசையில் சீர் வரிசையால்
    உன் எழிலை கசிந்துருகி ரசித்துவர
    என் ரசனைக்கு ரசம் கூட்டும் விதமாக
    சுருங்கக்கூறினும் சுவையாய் இருக்கும்
    எம்"எழுத்து" கவிதைகளை போல
    சங்காய் சுருங்கி ,அழகின் அடுத்த கட்டமாம்
    அந்தபுரத்திற்கு வழிக்காட்டியான நின் கழுத்தே !

No comments:

Post a Comment