Friday 26 April 2013

எத்தனை எளிதாய் சொல்லிவிட்டாயடி ....

நான் எண்ணிடாதே, என்னுள் நயாகரா நீர்வீழ்ச்சியாய்
விழுந்து எழுந்திடும் நின் நினைவுகளைப்போல்

திட்டப்பட்டியலிட்டும், துளைகொண்ட மண்பாண்ட தண்ணீராய்
மாதத்தின் பதியிலேயே செலவாகும் என் சம்பளம்ப்போல்

மன/கண் நிறைந்தகாதலி தன் மனம்கவர் காதலை
உள்ளம்கவர் காதலினிடம் சொல்லிசுகிக்கும் காதலைப்போல்

எத்தனை எளிதாய் சொல்லிவிட்டாயடி ..

நீயில்லாமலும் , நிச்சயமாய் நான் வரிவரிய வேண்டுமென .

மென்மைக்கும்,உண்மைக்கும் மேன்மை சேர்ப்பவளே !
இப்படி நீ உரைத்ததும் ,எப்படி நான் துடித்தேனென
அறிவாயா ?

உதாரணத்திற்க்கு சாதாரணமாய் சிலவற்றை தருகிறேன் ,
பெருவாயா ?

முப்பொழுதும் உன் கற்பனையில் ,கட்டவிழ்ந்து
கட்டுப்பாடின்றி,கண்டபடி ஓடியும் களைப்பின்றி
கழன்று சுழன்றிடும் , என் கற்பனை குதிரைகளுக்கு
"கொள்ளை கொள் " என உன் கொல்லும் எழில் நினைவுகளை
கொள் கொள் என கொள்ளக்கொடுத்தவன்

நீயில்லாமலும்,நிச்சயமாய் வரி வரையவேண்டுமென
நீ சொல்லைக்கேட்டதும் ,மனமொடிந்து,நிலைகுலைந்து

" கொள் கொள் " என கொள்ள கொடுத்த நினைவுகளோடு
கள்ளிப்பாலினை கொடுத்து கொன்றிட முனைந்ததை
அறிவாயா ??

No comments:

Post a Comment