Wednesday 24 April 2013

மௌனமான என் மௌனமொழிக்கு

மௌனத்தை பற்றி வரி பதிக்க வேண்டும் என்று
மௌனத்திற்கு நெடும் தூர சொந்தமான நபரிடமிருந்து
ஒரு கட்டளை (ழை)  ...

மௌனம் கூட இத்தனை அழகா என நான் கண்டதே
உனக்காக (உன் அழைப்பிற்காக) காத்திருக்கும் பொழுது தான்

மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியாம் ,அப்படியானால்
அச்சம்மதமே தேவை இல்லை
உன்னிடம் முழுதாய் சரண் அடைய தயாராய் இருப்பவனுக்கு
சம்மதம்  எதற்கு ?  சமாதானம் எதற்கு ??

மௌனம் வெகு சில நேரங்களில் வரம்
( என் அரவணைப்பில் நீ இருக்கும் பொழுதுகள் )
மௌனம் பல நேரங்களில் சாபம்
(உன்னோடு பேசாத ஒவ்வொரு பொழுதும்  )

மௌனம் மீது எனக்கு அவ்வளவாய் மரியாதை இல்லை முன்பு
மௌனத்திற்கு நீ கொடுக்கும் மதிப்பை அறிந்த பின்பு
மௌனத்தையே என் தாய் மொழி ஆக்கிட
மறுபரிசீலனை மேற்கொள்கிறேன் ..

மௌனமாய், உன் நினைவில் உன் பெயரையே
முணுமுணுத்த உதடுகள் கூட -இன்று
மௌனத்தையே முன்மொழிகின்றது ..

அடிப்பாவி !

மௌனம் உனக்கு இத்தனை பிரியம் என்று
முன்னமே சொல்லி இருந்தால் 
ஞானம் பல கற்றும், பெற்றும் ஞானி ஆகமுயன்றவன்
பேசாமல் மௌனி ஆகி இருப்பேனே ?

மௌனத்தின் அபிமானி நீ என்பதால் ,
மௌனத்தின் பலம் முன்னூறு மடங்கு கூடிவிட்டதா?
இல்லை -சப்தங்களின், இரைச்சல்களின்
கொடும் கடுமை தான் குறைந்துவிட்டதா ?

மாலை வேலை மவுண்ட் ரோடு (அண்ணா சாலை )
போக்குவரத்து நெரிசலை கூட
மௌன ராகமாய், மயங்குது என் மனம் ..

இத்தனைவரிகளா ??  எப்படித்தான் முடிந்ததோ என்னால் ??
எனக்கு தெரிந்து, சத்தியமாய் இவை சாத்தியமானது உன்னால் !

உனக்காக இத்தனை வரிகள் பதித்தேன் ,
எனக்காக ,ஒரே ஒரு வரி .

மௌனத்தை மோகிப்பவளே !
அம்மௌனத்திலேயே நீ மூழ்கி இருந்தால்
இவ்வளவு அழகான வரிகள் எப்படி சாத்தியம்

No comments:

Post a Comment