Friday 26 April 2013

காதல் கவிதை துளிகள்...

தெரிந்தவர்க்கும் ,புரிந்தவர்க்கும்
அறிந்தவர்க்கும் மட்டும்  அல்ல
நம் அன்புக்காதலின் ஆழமும்
ஆக்கமும் ,அழகையும் கண்டு
வியப்பிற்க்கே பெரும் வியப்பு

வியப்பு 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஆசையாய், பாசமாய், மடியினில்
சாய்க்கும் வைக்கும்பொழுதுகளில் எல்லாம்
மகனே, இரு புறமும் உனக்கு  (தாய் ,மனைவி)
இடி இருக்கின்றது என எச்சரிக்கை புரியும்
என் நலன் விரும்பியாய் நீ......

- மிருதங்கம்  
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கட்டுப்பாடற்ற காட்டாற்று வெள்ளம் போல
கட்டுக்கடங்கா என் இளமையையே
கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிதிநெருக்கடி போல
கட்டுகோப்பாய் கட்டுபடுத்தியது ,உன்
இளம் முதுமை ....


பருவம் 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

உன் குரல் கேட்காத காலங்களில் ,
உன் நினைவு நீங்கிய நிமிடங்களில்
என் மனம் ஏனோ வரண்டுப்போன
பாலைவனமாய்.....

பாலைவனம் 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சுவாசத்தில் மட்டுமே
இத்தனை குளிர்ச்சியா?
அன்பே நீ என்ன
தமிழகத்தின் அண்டார்டிக்கா வா ??

குளிர்  
 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

உன் நினைவுகளுக்கு அடிமையானதன் பிறகு
என் கண்கள் காணும் கருப்பு வெள்ளை காட்சிகளும்
பல வண்ணம் நிறைந்த  வர்ணங்களாய் ...

வர்ணம் 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
என்னை காட்டிலும் பல மடங்கு காதலை
உள்வைத்தும்,ஒன்றும் அறியா பிள்ளைபோல்
கடுகதியில் முத்தம் பெற முயற்சிக்கும்
உனக்குள் இருக்கும் உன்னதம் ...

விவேகம்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
உன் அறிமுகம் எனக்கு கிடைத்ததனால்

ஒருவேளை, உண்மையாக இருப்பானோ?? என
எண்ணத்தோன்றும் அப்பாவி ஜீவன் ....

இறைவன்   
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பாழடைந்த மண்டபம்
பழுதடைந்த பரணை
பயன்படுத்தாத   பொருள் கிடங்கு
பரபரப்பான நெடுஞ்சாலை
தினமும் நீ கூட்டி பெருக்கும் உன் வீடு,வாசல்
இப்படி எல்லா இடங்களிலும்  லட்சகணக்கில் இருந்தாலும்
என்றும் என் அபிமானம்  மட்டுமன்றி,  மனதையும் கவர்வது
உனக்கு தும்மல்  தந்திடும் அந்த  தூசி தான்

தூசி   
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அவளை, ஆசை ஆசையாய்
ஆசை வைத்த ஆசைக்கே  கிடைக்காத
அரும் பெரும் ஆசி , என்னை  பற்றி
குறுங்கவிதை எழுத சொன்ன
அடுத்த நிமிடமே எனக்கு ....

தூசி
 

 
 
 
  
   
 

No comments:

Post a Comment