Monday 22 April 2013

இனிய(அ)வளின் இனிமைகள் ......

வா வா வா தேனே !
என் திகட்டா இனிப்பே !

இன்பத்திலும் இனிமையிலும்
அளவு கொள்ளா
என் ஆருயிர் ரசகுல்லாவே !!

சுவை தித்திப்பில்,என் மனதினில்
மெல்லிய மலாய் (ஆடை) இட்ட
மொழு மொழு ரசமலாயே  !

நினைவினில் நீ நிலைத்திருப்பதால்
எனக்கு மட்டும்,இதயம் குலாப் ஜாமூனாய்
ரத்தமோ ஜாமூனின் ஜீராவாய் !

*************************************************************************
அடையார் ஆனந்த பவனின்
ஆனந்தத்திற்கு ஆணிவேர்க்காரணமே
உனக்கு இனிப்பு பிடிக்கும் என்பதாலே !
******************************************
அகர்வால் ஸ்வீட்சின் மொத்தபட்டியலும்
குட்டிபோட்ட நாயின் குட்டிகளாய்
தாயின் வால் பிடித்து பின்னாலே வந்துவிடும்
போகாதே அகர்வால் ஸ்வீட்ஸ் பக்கம் !
***************************************************************************
சக்கரை நிலவே !
அல்வா திங்க ஆசை கொண்டால்
அந்த கடைப்பக்கம் போய்விடாதே !
பாவம் ! இருட்டுக்கடைஎனும் பெயர்போகி
வெளிச்சகடை ஆகிவிட போகுது !
***************************************************************************
ஊரில் உலகில் எல்லாம்  குறிப்பிட்டகாலமே
வசந்தமெனில் , இனியவளே !
தேன் மலரே !,
உன் வீடிருக்கும் பகுதியின்
வண்டுகளுக்கும், பட்டாம்பூச்சிகளுக்கும்
வருஷமெல்லாம்  வசந்தமாமே ?

வாழ்த்து கவிதையை வாசிக்கின்றன !
**************************************************************************
கடும் நீரழிவு  நோயிற்க்கு
ஓர் உயர்வகை தேன் தான் தீர்வாமே ?
ரஷ்சிய ஆராட்சியாளரின் கண்டுபிடிப்பு .
இனியவளே !
அன்பாய் , பாசமாய் அழுத்தமாய்
நடுநெற்றியில்  உன் இதழொற்றி
ஒற்றை முத்தமிட்டுப்போ , பாவம் !
நோய் தீரட்டும் எனை பெற்ற தந்தைக்கு.

No comments:

Post a Comment