Friday 26 April 2013

" கவிதையில் ஓர் யுத்தம் செய்வேன்

மௌனம் மௌனம் மௌனமென
மௌனமாய் மூச்சுக்கு முன்நூறு முறை
மௌனத்தையே மனதினில்
மௌன மனனம் செய்தவளாய்
மௌனத்தையே மௌனித்து ,பின்
மௌனத்தையே தியானித்தவளே !
மௌனமனதினில் மகா மௌனியாய்
மௌனராகம், மௌனகீதம்
மௌன நினைவு , மௌன புரட்சி என
மௌனத்திர்க்கே பாடம் புகட்டிடும்
மௌனகுருவாய் தனை உலகிற்கே
மௌனமாய் பறைசாற்றிக்கொண்ட
மௌன மோகினியே !!

மௌனம் அதன் வாசத்தின் மீது கூட
லேசான பாசமும் கொள்ளாதவன் நான்
இன்று மௌனத்தை மிக மிக நேசிக்கின்றேன்
நேசிப்பதோடின்றி , உயிராய் சுவாசிக்கின்றேன்
ஆம், உன் மீதான உயர் நேசத்தால்

என் முன்னால் நேசமான சப்தத்தின் துணையோடு
உன்னால் உட்புகுத்தப்பட்ட நிசப்தத்தை (மௌனம்) எதிர்த்து
பின்னாளில் " கவிதையில் ஓர் யுத்தம் செய்வேன் " என
இப்போதே நிதர்சனமாய் தெரிவிக்கின்றேன்
உன் மீதான உயர் நேசத்தால் ......

" கவிதையில் ஓர் யுத்தம் செய்வேன் "

No comments:

Post a Comment