Friday 26 April 2013

ஒழிந்தே போய்விடுவேனோ ??

காய்ச்சல்  எனக்கு
காய்ச்சல்  எனக்கு
கேளுங்கள் கனவான்களே !
கடும் காய்ச்சல் எனக்கு !.

எப்போதுமே எக்குத்தப்பாய் யோசிக்கும்
கருனாடகத்தானின் கடுமையான
தொல்லைமிகு கட்டுப்பாடுகளை கடந்தேறி
தமிழகத்தின்  எல்லை தனை
தப்பித்தவறி, தொட்டடைந்திடும்
தலைக்காவேரி நீர்  போல
எப்போதாவதே வந்து சேரும்
காய்ச்சல் எனக்கு

காய்ச்சல்  எனக்கு
காய்ச்சல்  எனக்கு
கேளுங்கள் கனவான்களே !
கடும் காய்ச்சல் எனக்கு !.

காரணமில்லாமல் காய்ச்சலா ??

காய்ச்சலுக்கான காரணமறிய
காச்சுமூச்சாய் கத்திக்கிடந்த
இரத்தநாளங்களின் சத்தம் முடக்கி

\"உன் பேச்சும் , மூச்சுமே \" முழுமுதற்
காரணமென்பதை, முயற்சியின்பலனாய்
கண்டுகொண்டேன்  கடைசியாய் ...

அலைவரிசைகளின் வரி வரிசைகளாய் வரும்
ஒலி வரிசைக்கே, இத்தனை விமரிசை என்றால்

உலகின் உயர் பரிசான எனதாருயிர் உயிர் பரிசே !

பளிச்சிடும் ஒளியுடன், குளிரினை பொழிந்திடும்
உன் ஒளிக்கண்களின் ஒளிவரிசையினில்
ஒழிந்தே போய்விடுவேனோ ??

ஒப்பில்லா  என் உயிர் ஓவியமே

No comments:

Post a Comment