Friday 26 April 2013

ஹைக்கூ .....

ஆளுங்கட்சியின் அராஜக அரசாய் நீ
உன்னுள் (அநியாயமாய் ) இழுக்கப்பட்ட
அப்பாவி ச.ம .உ (MLA )  வாய் நான் ...

 -அப்பாவி ச.ம.உ (MLA ) -
((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((
சப்தங்களை மட்டுமே  சம்மதித்துவந்த
என் மன சிம்மாசனத்தில் - இன்று
சம்மணமிட்டபடி உன் "மௌனம்"

 - மௌனம் -
((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((99
அழகிய ஓசைகளெல்லாம் ஒன்றுக்கூடி
ஓர் தீர்க்க கூட்டம் நடத்தி
நீ இருக்கும் இடத்தில் மட்டும்
தலைவைத்தும் படுப்பதில்லையென
திட்டவட்டமாய் தீர்மானமிட்டதுதான் மீதம்
கூட்டத்தினில் கரவோசை அடங்கிடுவதர்க்குள்
சூரியனே அடங்கிவிட்டது !!

"ஓசை "
((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((
  செம்மைக்கு கிடைத்த செழுமை
ஏனோ ?
கருமைக்கு கிட்டவில்லை ??
உன்னில் ஒன்றிரண்டிடங்களில் தவிர்த்து
வேறெங்குமில்லை,கருமைக்கான
பெருமை ...

" கருமை "
(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((

வெறி என்றொரு
வார்த்தை வழங்கி
வரி வரை என்கின்றாய்
ஒரே வார்த்தையில் வரைகின்றேன்
நீ,உன் நினைவு என்றால் எனக்கு
வெறும் வெறியல்ல
"கொலை"வெறி ..

"வெறி 
(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((9
உன்னில் எனை கவர்ந்ததுன் கண்களே !
உன்னில் உனையே கவர்ந்ததும் அக்கண்களே !

உன் கண்களின் கவின் கவர்ச்சிக்கு
கனக்கச்சிதமான காரணம் யாதென்றேன் ?
கணமும் யோசிக்காமல் கண்ணீர் என்கின்றாய்
எனைகேட்டால், உன் விழியரசிக்கு
வெண்சாமரத்தத்திற்க்கு இணையாய்
கருஞ்சாமரம் வீசிடும்
துயில்கொள்ளும் தருணத்தினில்
திரைப்போர்வையாய் திறன்படும்
உன்
 " இமைகளே ".....
((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((
என்னவளே !

கரையோரமிருந்து உனை கண்டேன்
நின் எழில் சிறப்பினில் , இதயமிழந்தேன்
உயிரே ௧ உன்மீது அன்றே காதல் கொண்டேன்
லட்சம்கவிக்கொண்டு அர்சித்துவிட்டேன்
ஒரேயொருமுறை தொட்டுக்கொள்கிறேன்
கொஞ்சம் மனமிரங்கி , கீழிறங்கிவா
என் தொடுவானமே !!

தொடுவானமே !!
(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((காற்றை காட்டிலும்
மிக மென்மையானவளே !
கொஞ்சும் பூக்களினை
உச்சி முகர்ந்து
கொஞ்சிடவேண்டாமென
கெஞ்சி கேட்டேனே
கொஞ்சமாவது பேச்சை கேட்டாயா ?

கொஞ்சிவிட்டு வந்துவிட்டாய் வஞ்சி நீ
வந்தபின்னர் நடந்ததென்ன அறிவாயா ?

உன் சுவாசம்பட்ட பூக்களினை சுற்றி
தேன் எடுத்திடுது தேனீக்கள் இதழொற்றி

சுவாசத்தின் சுவைபட்ட பூக்களுக்கோ
தேனீக்களின் ரீங்கார ஓசையது நாராசமாம்
உன் சுவாசத்தின் ஓசையது ரீங்காரமாம் ....
((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((99
காலகாலமாய் காத்துவருகின்றேன்
கத்தரிக்கோல் கொண்டு நீ
கத்தரித்தேறிந்துவிட்ட உன்
கால் கட்டைவிரலின்
கால் நகத்தினை
காவியமாய் .....

காவியம் ...
  

No comments:

Post a Comment