Monday 22 April 2013

முத்தத்தின் மகத்துவங்கள் ....

உறைபனியாய்
உள்ளம் உறைந்திடும்
ஒவ்வோர் உரையாடலின் ஊடேயும்
அதற்காகவே துவங்கி
அதற்காகவே தொடர்ந்து
அதனோடே முடிவடையும்
இச்சைக்குரிய சர்ச்சை
 முத்தம் ........
 ********************************************************************
மனம் அதிரும் சத்தத்தையும் கூட
சச்சரவாய் கருதி சமாதனம் நாடிய
அகிம்சாவாதிதான் நான்,இன்றோ

மொத்த உலகத்துடனும் யுத்தம்புரிய
நித்தம்நித்தம் ஆயத்தமாய்
சுத்தமான நின் முத்தம் பெற்றிடும்
சித்தம் பொருட்டு .....
********************************************************************
தமிழத்தில் மட்டுமின்றி
தரணியிலேயே தன்மானத்தினை
தழையோ தாழை என
தழைக்கசெய்த தலைவனின் தலைதொண்டன்
தத்து பித்து கதைகளை கூறியபடி
குழையோ குழை யென
குழைவதைக் காண்
நின் கோவையிதழ் பதியும்
முத்தம் பெற ...
********************************************************************
தத்தம் காதலினை பரஸ்பரம்

ஓர் பூவோடு மற்றொருபூ பகிர்ந்துகொள்ள
காற்றின் பங்களிப்பை போல்

கரையோடு கடல் பகிர்ந்துகொள்ள
அலைகளின் பங்களிப்பை போல்

மேகமது மண்ணோடு பகிர்ந்துகொள்ள
மழையின் பங்களிப்பை போல்

மலையுச்சி தரையோடு பகிர்ந்துகொள்ள
அருவியின் பங்களிப்பை போல்

இந்த அற்பஜீவன் பகிர்ந்துகொள்வதற்க்கு
மிகமுக்கியமான பங்களிப்பு
 நின்"முத்தம்"

No comments:

Post a Comment