Friday 26 April 2013

நாசிக்கு ஓர் அர்ப்பணம் !!!!!

உலகில் மற்ற மனித ஜீவன்களுக்கெல்லாம்
பிரதானபயனாய்,
சுவாசிப்பதற்க்கு மட்டுமே
படைக்கபட்டிருக்கும்  நாசி

உயிர் திருடும், உயர் திருடியே !
உனக்கு மட்டும்,
நான் உருகி உருகி நேசிப்பதற்க்கும் கூட .....

*****************************************************************************
" ஊசி முனையின் காதுக்குள்ளே
ஒட்டகங்களை நுழைப்பதாம் காதல் "

எற்றுக்கொள்ளப்படுவதர்க்கு ஏற்ற கருத்தா என
கடுங்குழப்பத்தில்தான் இருந்தே

ன், நேற்றுவரை

நின் நாசிநுனியின் கூர்மையிலே
உயிர் பெட்டகமாம் என் இதயத்தை
நீ ஈர்த்திட்ட வரை...
*********************************************************************************
இயல்பாய் இரு இதயங்கள்
இணைந்திட ஈடில்லா,இன்றியமையாதது
இதயமே எனில்

இன்றிலிருந்து இனியவளே !
நின் நாசி எனக்கோ , வெளியே இருக்கும்
இரண்டாம் இதயம் !
********************************************************************************
வாசம் வீசும் வஸ்துக்கள் யாவையும்
வரவேற்று,வசம் ஈற்று ,நுகர்ந்துணர்ந்திடவும்

வாசம் செய்திட  இவ்வுலகினில் ,மிக பிரதானமான
சுவாசம் அதை வீசும் காற்றிலிலிருந்து
பிரித்தெடுப்பதுவும் தான்,நாசியின் வேலையாம்

இருந்தும்,எனக்கு மட்டும் ஏன் ??

நேரிலும், நினைவிலும் மட்டுமன்றி
உள்ளிழுக்கும் ,வெளியனுப்பும் (சுவாச)காற்றிலும்
அழகுக்கூட்டி வாட்டுகின்றது
நின் நாசி ...
********************************************************************************
 வான்மழையாய்  வாய்வழியே
தேன்மழையை தான்மொழியும் தேன்மொழியே !

உன் வாய்மொழியும் தேன் மழையது
தேக்கம் அடைந்திட  கூடாதெனும் பெரும்
ஏக்கம் கொண்டு தானோ ?
உன் வாய்க்கு வக்காலத்தாய் ஊக்கத்துடன்
தன்  தேன்பாஷை  பேசிடுதோ,உன் கண்கள் ??

கண்களால் பேசுவதென்பது கருப்பு/வெள்ளை
காலம் தொட்டதே , என்றபோதும்
உன் நாசியின் பங்களிப்பே மதி மயக்குகிறது
சுவாசத்தின் பாஷையில் பேசிடும் பொழுதுகளில் .

எனக்கோர் ஐயம் !!

நீ ஆசுவாசப்படுகையில் , சிறு புயலாய்
வெளிப்படுதே சுவாசம் ,அக்தென்ன
உன்  மோகமொழியோ ??

உழைப்பின்  களைப்பினில் உடல் முறுக்கி
ஒவ்வோர் முறையும் நீ ஆசுவாசபடுகையில்
என் உயிர் சுவாசம் தடைபடும் ,தகவல் அறிவாயோ

No comments:

Post a Comment