Friday 26 April 2013

காதல் ஹைக்கூ .... --1

என் அறிமுகத்திற்கு முன்புவரை
என்னவளின் உயிர்தோழியாய்
உடனிருந்தவள், இன்றோ
நெடுந்தூர சொந்தமாய்
வந்து வந்து போகிறாள்
எப்பொழுதாவது ......

கண்ணீர்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ 


மேகப்போர்வைக்குள்  ஒளிந்துகொண்ட வெண்ணிலவே !
இரட்டை விழியில் இருந்து தப்பிவிடுவாய் என்றால்
லட்சம் விழிகள் கொண்டு காத்திருப்பேன்.....

- நட்சத்திரம்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
 
அவளை,  பார்ப்போரின் புருவங்கள்
வியப்பால் உயர்த்தும் பருவத்தில், நீ
பலமுறை மேலும் கீழும்  தூக்கி சுமக்கின்றாய் .
இந்த வயதில், அவள்  பெற்றோர்க்கும் இல்லாத
அரும் பெரும் பாக்கியம் ,உனக்கு மட்டும் எப்படி ?
அலுவலக மின்தூக்கியே ( LIFT )......
 
மின்தூக்கி  

 

No comments:

Post a Comment