Monday 29 April 2013

சில கிறுக்கல்கள் ...


உலகின் மிக  விலையுர்ந்த துணி
ஏதென்று  அறிவீரா  அறிவோரே ??

அவள் உதடுகளை ஒட்டாத
என் உதடுகளுக்கு  கிட்டாத
அரும்பெரும்  பாக்கியமாய்
அவ்வப்போது, ஒத்தி ஒத்தி
ஒத்தடம்  கொடுத்திடும்
ஒற்றைத்துணி
கைக்குட்டையே

கைக்குட்டையே 
 
#############################################################
அளவினில் ஆறடியினை கடந்துவிட்ட
அசுரவளர்ச்சி கொண்ட
அரும்பெரும் உருவங்களிர்க்கே
அசராத என் மனம்

அங்குலம் ஐந்தும் அடையாத
அவள்தம் சின்னஞ்சிறு
அழகு நாசியினை நினைந்து
அரண்டுபோகின்றது !

   அதிசயம் ..
################################################################
மரங்களின் மெல்லிய வளர்ச்சி
மலர்களின் மயக்கும் மலர்ச்சி
பூமியின் அன்றாட சுழற்சி
கண்களால் காணாத போதும்
இவை அனைத்தும் மானசீகமே
என் மனம் நிறைந்தவேளே
உன்னை போல் ....

    உன்னை போல்
################################################################

அவள் நினைவுகளுக்கு நீள் தடை
நிச்சயமென தெரிந்தே, தினமும்
நான் புரியும் தற்காலிக தற்கொலை

   தூக்கம்
###########################################################
கொஞ்சும் நினைவதை
கொஞ்சமே கொஞ்சம் கொடுத்து
கொள்ளை கவிதைகளை வட்டியாய்
கொள்ளை கொள்ளும் கந்துவட்டிக்காரி நீ ....

கந்துவட்டிக்காரி நீ.....
##############################################################
சாதியொழிப்பின் தீவிர செயலாளர் நான், இன்றோ
சாதி ஒழிப்பிற்கு தீவிர எதிர்ப்பாளர்
சாதி மல்லி என்றால் அவளுக்கு தீவிர பிரியமாம்

அவளுக்காக...
###########################################################
 
  எத்தனை எத்தனை  நாட்களாய்
எத்தனை எத்தனை  லட்ச கவிதைகள்
எழுதி எழுதி , கிழித்து கிழித்து
என் வீடே , குப்பை மேடானது தான் மீதம்
உன் போல அழகிய கவிதை எழுதிட முடியவில்லை ...

அழகே ! அழகின் அழகே !!

ஒரே முறை என் கண்முன் தோன்றிடு !
கண்களால் உன்னை நகல் எடுத்துகொண்டு
மீண்டும் முயற்சிப்பேன் , மனம் தளரா
முழு முயற்சியோடு !!!

  முயற்சி 
#######################################################
 
  
செல்வத்தை தவிர்த்து , எல்லா வளங்களையும்
வேண்டிய அளவிற்க்கு வாரி வழங்க
வேண்டி விழைந்தேன் ,
எல்லாம் வல்ல இறைவனை ,
வேண்டியதை, வேண்டியபடிவழங்கினான்
உன்னை விடுத்து - ஒருவேளை
உலகின் உயர்செல்வங்களை விட விலயுயர்ந்த
உயிர்ச்செல்ல்வம்  நீ எனும்
உண்மை உணர்ந்ததாலோ ??

உயிர்ச்செல்ல்வம்  நீ....
 

No comments:

Post a Comment