Friday 26 April 2013

காதல் ஹைக்கூ --2

மின்சார தட்டுபாட்டினால் ஒட்டுமொத்த
தமிழகமே இருளில் மூழ்கும் நிலை வரின்
ஒளிமயமான உன்  கண்களை திறக்க சொல்லி
தமிழகத்தின் மின்சார பஞ்சம் தீர்ப்பேன்
 
ஒளி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

சொல்வதை சொல்லும் செல்லக்கிளி
                        என் "மீட்டு "
சொல்வதை  சொல்லுமுன் உணர்ந்து விடும்
                 உன் காதல் கிளி நான் 
 கிளி 
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

செத்துப்போன சில்க் ஸ்மிதாவை
சில நிமிடங்களாவது சிந்திக்க வைக்கின்றது
சிணுங்கலோடு வெளிப்படும் அவள் 
                    சிரிப்பு
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பருவம் அடைந்த சில,பல வருடம் கடந்தும்
உனக்கு இப்படி ஒரு பெரும் புகழா ??
ஒற்றை நிறத்தினில் வில்லாய் வளைந்திருக்கும்
உன் புருவம் அதை கண்டு வெட்கியே
வெளிவருவதில்லையாம்
                வானவில்  
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
 சூட்டுடன் ஒப்பிட்டு பேசுவது தான் வாடிக்கை
அவளுக்கு மட்டும் எப்படி சுவாசகாற்றும்
                 பனிக்கற்றாய்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
 சுவாசம்,இதயம்,இதயத்துடிப்பு நாடி,நரம்புகள்,ரத்தம்
 இவை அத்தனையும் மொத்தமாக ஒத்துழையாமை புரிந்தாலும் 
       ஓர் ஒற்றை பொருள் கொண்டே உயிர்வாழ்வேன்
                                    " உன் நினைவு "



                  வெறும் அழகாய் மட்டும் இருந்திருந்தால்
அங்கொன்றும் இங்கொன்றுமாய் மட்டும் நிறைந்திருந்திருப்பாய் 
உயிரை வருடும் நினைவுகளாய் எங்கும் நிறைந்திருக்கின்றாய்
                         இயற்கையாய் இருப்பதனால் 
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$4
 நட்சத்திரங்கள்

பனியில்  நனைந்த  நிலவு  பெண்ணின் 
தொடர்  தும்மல்களில்  தெறித்து  சிதறிய 
எச்சில் ( முத்து  ) துளிகள் ......
 

No comments:

Post a Comment